பிறப்பு, இறப்பு சான்றிதழ் சிறப்பு முகாம்
பிறப்பு, இறப்பு சான்றிதழ் சிறப்பு முகாம்
ராமநாதபுரம்
கமுதி
கமுதி வட்டத்தில் இருந்து நீண்ட நாட்களாக பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கமுதி தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பரமக்குடி கோட்டாட்சியர் அப்தாப் ரசூல் தலைமை தாங்கினார். கமுதி வட்டாட்சியர் சேதுராமன், மண்டல துணை வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர், பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து நீண்ட நாட்களாக தீர்வு காணப்படாமல் இருந்த பிறப்பு, இறப்பு சான்றிதழ்களுக்கான கமுதி வட்டத்தைச் சேர்ந்த 57 விண்ணப்பதாரர்களின் மனுக்களை பரிசீலனை செய்து எடுத்துக் கொள்ளப்பட்டுஅனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story