இந்திராகாந்தி பிறந்த நாள் விழா


இந்திராகாந்தி பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை, ஓசூரில் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை, ஓசூரில் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்திராகாந்தி பிறந்த நாள்

தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் தேன்கு அன்வர், மாநில பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துர் ரகுமான் தலைமையில் நிர்வாகிகள் இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தேன்கனிக்கோட்டை முன்னாள் நகர தலைவர் தாஸ், மாவட்ட துணைத்தலைவர் சபியுல்லா, நிர்வாகிகள் அன்னய்யாரெட்டி, ரெங்கப்பா, ஜெயக்குமார், தியாகராஜன், சாந்த் பாஷா, நூருல்லா, சுயலூதீன், நஞ்சுண்டன், அசன் ராஜா, ராஜா, மொகமத், கார்த்தி, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

இதேபோன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திலும், காந்தி சிலை அருகிலும் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி, இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தார்.

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநிலச்செயலாளர் வீர முனிராஜ், மகளிர் அணி தலைவி சரோஜம்மா, மாவட்ட துணை தலைவர் கீர்த்தி கணேஷ், ஓ.பி. சி.பிரிவு மாவட்ட தலைவர் குமார், சிறுபான்மையினர் மாவட்ட செயல் தலைவர் அசேன், மாவட்ட பொருளாளர் மாதேஷ், நிர்வாகிகள் பைரோஜ், லலிதா, முனிகிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. செல்வம், கிருஷ்ணன், சீனிவாசன், நாராயணப்பா, கோவர்தனன், நஜீர், பிரகாசம், மஞ்சுநாத், முன்னாள் வட்டார தலைவர் சிவப்பரெட்டி, ஓ.பி.சி. பிரிவு சீனிவாசன், திருவேங்கடம், திப்பைய்யா, குணசேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story