புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா


புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிறந்தநாள் விழா
x
திருப்பூர்


குடிமங்கலம் ஒன்றியம் மசக்கவுண்டன்புதூரில் பிறந்தவர் டாக்டர் கிருஷ்ணசாமி. இவர் பூளவாடி அரசுப்பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்தவர். அவர் படித்த பள்ளியின் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாகவும் மது மற்றும் புகையிலைக்கு எதிராகவும் நேற்று உடுமலை மத்திய பஸ் நிலையம் எதிரில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு டாக்டர் கிருஷ்ணசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர், பா.ஜ.க பொதுச் செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. தனியரசு, விஸ்வகர்மா ஜகத்குரு பாபுஜி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப்பேசினர்.

டாக்டர் கிருஷ்ணசாமி தன்னுடைய பள்ளி ஆசிரியர்களை பாராட்டி கவுரவித்தார். இதனையடுத்து குடிமங்கலம், பூளவாடி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மது மற்றும் புகையிலைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கப்பட்டது.


Next Story