காயாமொழியில் பிறந்த நாள் விழா:பா.ராமச்சந்திரஆதித்தனார் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை


காயாமொழியில் பிறந்த நாள் விழா:பா.ராமச்சந்திரஆதித்தனார் சிலைக்குமாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:46 PM GMT)

காயாமொழியில் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பா.ராமச்சந்திரஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

'மாலை முரசு' நாளிதழ் நிர்வாக ஆசிரியர் மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 89-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காயாமொழியில் உள்ள மணிமண்டபத்தில் இருக்கும் அவரது முழு உருவ சிலைக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற கால்நடை துறை உதவி இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ராகவ ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், ராதாகிருஷ்ணன் ஆதித்தன், கார்த்திகேய ஆதித்தன், சிவபால ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், எஸ்.எஸ்.ஆதித்தன், குமரேச ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், அசோக் ஆதித்தன், தனிகேச ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், அமிர்தலிங்கம், தளவாய்சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், வெங்கடேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story