திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா


திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 26 Sept 2022 12:15 AM IST (Updated: 26 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டுபொறியியல் கல்லூரி வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவையொட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சாதனைகள் குறித்து வேதியியல் துறை பேராசிரியர் பாலகுமார் பேசினார்.

விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கலை அறிவியல் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் மரியசிசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ், பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு சிவந்தி கலை விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களின் கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு மாடல் மேக்கிங், பென்சில் ஆர்ட், டேலன்ட் ஹன்ட், ரங்கோலி, தனிநடனம், சதுரங்க போட்டி, புதையல் வேட்டை, வைபை குக்கிங், பட்டிமன்றம், கவிதிடல், படத்தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பாலகுமார், ஜெயந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story