கட்டலாங்குளத்தில் பிறந்தநாள் விழா:வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை
கட்டலாங்குளத்தில் பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகு முத்துக்கோன் 313-வயது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்திலுள்ள மணிமண்டபத்தில் அவரது 313-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜெயா, கயத்தாறு தாசில்தார் நாகராஜ், பஞ்சாயத்து தலைவர் தம்பா சேசுபால்ராயன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அ.தி.மு.க.
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ, வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, நகரச் செயலாளர் விஜயபாண்டி ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, மாநில பொதுச்செயலாளர் பொன்.வி.பாலகணபதி, தொகுதி பொறுப்பாளர் கே.நீலமுரளி யாதவ், தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள்மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் பூல்பாண்டியன் தலைமையில் அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ம.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் அவரது உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர்.
முளைப்பாரி ஊர்வலம்
மேலும், கட்டாலங்குளம் கிராமத்தில் அம்மன் கோவில் முன்பு இருந்து 100பெண்கள் பால் குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து கிராமத்தில் முக்கிய தெருக்கள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்தை அ.ம.மு.க. தென்மண்டல பொறுப்பாளரும், துணைப்பொதுச் செயலாளருமான மாணிக்கராஜா தொடங்கி வைத்தார். பின்னர் இந்த ஊர்வலம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அழகுமுத்து கோன் சிலையை சுற்றி வந்து பெண்கள் வணங்கி சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அ.ம.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அ.சிவபெருமாள், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன், நகரச் செயலாளர் காந்தையாபாண்டியன் மற்றும் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் திரளாகக் கலந்து கொண்டு வீரன் அழகுமுத்துக்கோன் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை துணைமேயர்
அழகுமுத்துக்கோன் உருவச்சிலைக்கு நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் கவுன்சிலர் சங்கர், தி.மு.க.கிழக்கு மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், மாநகர பிரதிநிதி கண்ணன், வட்டச் செயலாளர்பி.பி.ராஜா, வட்டப்பிரதிநிதி மாயகிருஷ்ணன், திருவடி முத்து, தச்சை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் துர்காராம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜி.வி.கோபால், இளைஞரணி ஆனந்த், வேல்முத்து, ஜி.வி.மூர்த்தி, மாதவன், மாரியப்பன், நம்பி பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பலத்த பாதுகாப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் ஒன்பது அடி அலகு குத்தி வந்தார். இவ்விழாவை முன்னிட்டு போலீஸ்சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 13 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.