தூத்துக்குடியில் பிறந்தநாள் விழா:டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடியில் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
தூத்துக்குடியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு தெட்சணமாறநாடார் சங்க முன்னாள் நிர்வாகிகள் டி.ஜெயக்கொடி, கே.ஏ.பி.சீனிவாசன், மு.பா.தமிழ்செல்வன், லிங்கசெல்வன் ஆகியோர் ஏற்பாட்டில் வ.உ.சி. மார்க்கெட் அருகே டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படம் அலங்கரித்து வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாவட்ட மகளிர் அணி கஸ்தூரிதங்கம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, மாகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், கீதாமுருகேசன், ராமகிருஷ்ணன், அந்தோணி பிரகாஷ் மார்சலின், வட்ட செயலாளர் பாலகுருசாமி, அண்ணாநகர் பகுதி பிரதிநிதி தயாளசுந்தர், பேச்சாளர் சரத்பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர். ஐ.என்.டி.யு.சி மாநில பொதுச் செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டி.டேவிட் பிரபாகரன், மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
சமத்துவ மக்கள் கழகம்
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட் அருகே அலங்கரித்து வைக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கி மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், சமத்துவ மக்கள் கழக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகரத் தொண்டர் அணி செயலாளர் காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க.
தூத்துக்குடி மாநகர ம.தி.மு.க. சார்பில் மாநகர செயலாளர் முருகபூபதி தலைமையில் ம.தி.மு.க.வினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் பேச்சிராஜ் மற்றும் நிர்வாகிகள் முருகேசன், அனல் டேவிட், செந்தாமரைக்கண்ணன், பொன்ராஜ், சுந்தர் ராஜ், தெரம்மை, மகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி
தூத்துக்குடி மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.பி.மாரியப்பன், மாவட்ட தலைவர் எம்.எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் கட்சியினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பொருளாளர் மில்லை தேவராஜ், இளைஞர் அணி செயலாளர் அருண், பொருளாளர் வின்சென்ட், ஒன்றிய செயலாளர் கதிரேசன், ரஞ்சித், பெத்து விஷ்ணு, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பி.எஸ் அணி
தூத்துக்குடி மாவட்ட ஓ.பி.எஸ். அணி செயலாளர் ஏசாதுரை தலைமையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் கதிர்வேல், தூத்துக்குடி வக்கீல் சங்க தலைவர் செங்குட்டுவன், தூத்துக்குடி ஒன்றிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் ரவி மற்றும் நாடார் சங்கம் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்ட மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.