காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
சோளிங்கரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சோளிங்கர் நகர காங்கிரஸ் தலைவர் டி.கோபால் தலைமை தாங்கினார். சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் தொகுதி பொறுப்பாளர் ராஜா, ஒன்றிய தலைவர் உதயகுமார், வழக்கறிஞர் ரகு ராம்ராஜ், ஜெயவேலு, குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story