ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி பிரியாணி மாஸ்டர் பலி


ெரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி பிரியாணி மாஸ்டர் பலி
x

வாணியம்பாடி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி பிரியாணி மாஸ்டர் இறந்தார். அவருடைய உடலை எடுத்து செல்ல விடாமல் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி பிரியாணி மாஸ்டர் இறந்தார். அவருடைய உடலை எடுத்து செல்ல விடாமல் பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பிரியாணி மாஸ்டர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் பயாஸ் அஹமத் (வயது 45). பிரியாணி மாஸ்டர். இவர் நேற்று பிரியாணி செய்வதற்காக அம்பலூர் பகுதிக்கு சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வாணியம்பாடி அருகே சிக்ரனபள்ளி பகுதியில் உள்ள ெரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரில் ஒருவர் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அம்பலூர் போலீசார் மற்றும் தீ அணைப்பு துறையினர் சென்று உடலை மீட்டு விசாரணை செய்ததில் காணாமல் போன பிரியாணி மாஸ்டர் பயாஸ் அஹமத் என்பது தெரிய வந்தது.

வாக்குவாதம்

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு குவிந்த அப்பகுதி மக்கள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சுரங்க பாதை பணி இன்னும் முடிவடைய வில்லை. சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள நீரால் அப்பகுதியை சுற்றியுள்ள அம்பலூர், புத்துக்கோவில், சிக்ரணபள்ளி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் மிகவும் சிரமப்பட்டு சென்று வருவதாகவும், உடனடியாக தேங்கியுள்ள நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உடலை எடுத்து செல்ல விடாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ரெயில்வே நிர்வாகத்திடம் கூறி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து அம்பலூர் போலீசார், பயாஸ் அஹமத் உடலை பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story