பிஷப் கால்டுவெல் வம்சாவளியினர் இடையன்குடி வருகை


பிஷப் கால்டுவெல் வம்சாவளியினர் இடையன்குடி வருகை
x

பிஷப் கால்டுவெல் வம்சாவளியினர் இடையன்குடி வந்தனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

தமிழ்மொழிக்கு ஒப்பிலக்கணம் எழுதிய பிஷப் கால்டுவெல் நினைவு இல்லம் திசையன்விளை அருகே இடையன்குடியில் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வசித்து வரும் அவரது வம்சாவளியை சேர்ந்த ஜோனத்தான், பெட்ரோனல்லா, வில்லியம்ஸ், லிலிக்கா ஆகியோர் இடையன்குடி வந்துள்ளனர்.

அவர்கள் அங்குள்ள கால்டுவெல் கட்டிய ஆலயம், அங்குள்ள அவரது நினைவிடம், அவர் பெயரில் உள்ள பள்ளிக்கூடங்கள், அவரது மனைவி எலைசா கால்டுவெல் பெயரில் உள்ள கல்லூரி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

ஆலயத்தில் கால்டுவெல் சகோதரர்கள் வழங்கிய ராகமணி ஓசை கேட்டு மகிழ்ந்தனர். ஆலய கோபுர உச்சியில் ஏறி மகிழ்ந்தனர். பின்பு கால்டுவெல் நினைவு இல்லத்திற்கு சென்ற அவர்கள் அங்குள்ள கால்டுவெல் சிலை முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர். நினைவு இல்லத்தில் உள்ள புகைப்படங்களை பார்த்து வியந்தனர். கால்டுவெல் பயன்படுத்திய உடை, கட்டில் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர். அங்குள்ள வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

எங்கள் வம்சாவளியினர் வாழ்ந்த வீட்டை அரசு நினைவு இல்லமாக ஆக்கியுள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது. அவர் வாழ்ந்த மண்ணில் அவர்களது குழந்தைகளுக்கு எங்கள் மூதாதையர்கள் பெயரை சூட்டி இருப்பது மகிழ்சியாக உள்ளது. அவர்களது வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியளித்தது. கால்டுவெல் நினைவு இல்லத்தை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக இடையன்குடி வந்த அவர்களை சேகரகுரு பர்னபாஸ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் மருதூர் மணிமாறன் உள்பட பலர் வரவேற்பு அளித்தனர்.


Next Story