கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் குட்டிகளுடன் காட்டெருமைகள் முகாம்-பொதுமக்கள் அச்சம்


கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் குட்டிகளுடன் காட்டெருமைகள் முகாம்-பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி குடியிருப்புப் பகுதியில் குட்டிகளுடன் காட்டெருமைகள் முகாம் -பொதுமக்கள் அச்சம்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி நகர் பகுதியில் தற்போது காட்டெருமை, கரடி, முள்ளம்பன்றி, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் காட்டெருமைகள் நகரின் முக்கிய சாலைகளில் நடமாடி வருவதுடன், குடியிருப்பு பகுதிகளிலும், குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களிலும் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன. கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தேயிலைத் தோட்டங்களில் புற்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகின்றன. இவற்றை மேய்வதற்காக ஏராளமான காட்டெருமைகள் குட்டிகளுடன் வந்து தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி வியூ ஹில், காம்பாய் கடை, ஹேப்பி வேலி உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புக்களை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ள 10 க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளதுடன், அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து நடமாடி வருகின்றன. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகளும், தேயிலைப் பறிக்கச் செல்லும் தொழிலாளர்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இவ்வாறு உலா வரும் காட்டெருமைகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story