காட்டெருமை நடமாட்டம்; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
குன்னூர்-கோத்தகிரி சாலையில் காட்டெருமை நடமாட்டத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நீலகிரி
குன்னூர்,
குன்னூர் பகுதியில் காட்டெருமைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவை கூட்டமாகவோ, தனியாகவோ சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிகின்றன. குன்னூர்-கோத்தகிரி சாலை சிம்ஸ் பூங்கா அருகே ஹைபில்ட் வனப்பகுதியில் காட்டெருமைகள் வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று பகலில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டெருமை சிம்ஸ் பூங்கா அருகே நடமாடியது.
சாலையில் காட்டெருமை உலா வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது சிலர் காட்டெருமையை புகைப்படம் எடுத்தனர். சாலையோரத்தில் உள்ள குடியிருப்புவாசிகள், நுழைவுவாயிலை மூடி காட்டெருமை உள்ளே வருவதை தடுத்தனர். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டெருமை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.
Related Tags :
Next Story