கோத்தகிரியில் உலா வந்த காட்டெருமை


கோத்தகிரியில் உலா வந்த காட்டெருமை
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உலா வந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதி, 5 சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பு பகுதியாக உள்ளது. அங்கு பகலில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இந்தநிலையில் நேற்று பகல் நேரத்தில் காட்டெருமை ஒன்று சாலையின் குறுக்கே நடந்து சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்ததுடன், சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். பின்னர் காட்டெருமை காமராஜர் சதுக்கம் பகுதியில் இருந்து டான்போஸ்கோ செல்லும் சாலை வழியாக சென்றது. தொடர்ந்து அருகே இருந்த தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. மேலும் காமராஜர் சதுக்கம் பகுதியில் உள்ள நேரு பூங்காவிற்குள் நுழைந்தது. இதனால் அந்த சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காட்டெருமை சென்ற பின்னரே, அந்த சாலையில் போக்குவரத்து சீரானது.


Next Story