விவசாய நிலங்களை நாசம் செய்யும் காட்டெருமைகள்
படவேடு மங்கலாபுரம் கிராமத்தில் விவசாய நிலங்களை நாசம் செய்யும் காட்டெருமைகள்
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
கண்ணமங்கலம் அருகே படவேடு மங்களாபுரம் கிராமம் படவேடு செண்பகத்தோப்பு அணைக்கு செல்லும் வழியில் உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள விவசாய நிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரத்தில் காட்டெருமைகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருகிறது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் அச்சமும், வேதனையுடன் உள்ளனர்.
எனவே சந்தவாசல் வனத்துறையினர் காட்டெருமைகள் வருவதை கண்காணிக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story