படவேடு மங்கலாபுரம் பகுதியில்பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகள்
படவேடு மங்கலாபுரம் பகுதியில்பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை
கண்ணமங்கலம்
படவேடு மங்கலாபுரம் பகுதியில்பயிர்களை நாசம் செய்யும் காட்டெருமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ஊராட்சி மங்கலாபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் இரவு நேரங்களில் காட்டெருமைகள் பயிர்களை மேய்ந்து நாசம் செய்து வருகின்றன. இந்த பகுதியில் நெல், கரும்பு, வாழை உள்பட பல்வேறு பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். காட்டெருமைகள் அவற்றை முறித்து நாசம் செய்வதால் இழப்பு ஏற்படுகிறது.
இது குறித்து வார்டு உறுப்பினர் குப்புசாமி மூலம் சந்தவாசல் வனத்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது, காட்டெருமைகள் வராமல் இருக்க வனத்துறையினர் போதிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story