விளையாட்டு மைதானத்தில் சண்டையிட்ட காட்டெருமைகள்


விளையாட்டு மைதானத்தில் சண்டையிட்ட காட்டெருமைகள்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே விளையாட்டு மைதானத்தில் சண்டையிட்ட காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபநாட்களாக காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளிலும் உலா வருகின்றன. குன்னூர் அருகே ஜிம்கானா கால்ப் மைதானம் உள்ளது. அப்பகுதி வனப்பகுதியையொட்டி இருக்கிறது. இந்த வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிகளவு உள்ளன. இவை அடிக்கடி சாலையில் சுற்றித்திரிந்து வருகின்றன. அந்த மைதானத்தில் காலை, மாலையில் கால்ப் விளையாட்டுகள் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் நேற்று காலை கால்ப் விளையாட்டின் போது, 3 காட்டெருமைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி மைதானத்தில் முகாமிட்டன. இதில் 2 காட்டெருமைகள் திடீரென சண்டையிட்டு கொண்டன. ஒன்றுக்கு ஒன்று மோதி சண்டையிட்டது. இதனால் கால்ப் விளையாட்டு நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் மைதானத்தில் முகாமிட்ட காட்டெருமைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.



Next Story