கொடைக்கானல் நகரில் கூட்டமாக உலா வந்த காட்டெருமைகள்


கொடைக்கானல் நகரில் கூட்டமாக உலா வந்த காட்டெருமைகள்
x
தினத்தந்தி 16 July 2023 2:30 AM IST (Updated: 16 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகரில் காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தன.

திண்டுக்கல்

கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் புகுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று காலை, மாலை வேளைகளில் கொடைக்கானல் எம்.எம். தெரு, குறிஞ்சி நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தது. இதனைக்கண்டு அந்த வழியாக வந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர். பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன், காட்டெருமைகளை வனப்பகுதியில் விரட்டினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. இதனிடையே கொடைக்கானல் நகருக்குள் காட்டெருமைகள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story