புஞ்சைபுளியம்பட்டியில் தடையை மீறி மோட்டார்சைக்கிளில் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினரால் பரபரப்பு


புஞ்சைபுளியம்பட்டியில் தடையை மீறி  மோட்டார்சைக்கிளில் ஊர்வலம் செல்ல முயன்ற  பா.ஜ.க.வினரால் பரபரப்பு
x

தடையை மீறி மோட்டார்சைக்கிளில் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.க.வினரால் பரபரப்பு

ஈரோடு

புஞ்சைப்புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோயில் முன்பு பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 8-ம் ஆண்டு சாதனை விளக்க மோட்டார்சைக்கிள் ஊர்வலம் மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் புறப்பட்டு சத்தியமங்கலம் வழியாக கோபியை சென்றடையும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கரிவரதராஜ பெருமாள் கோவில் முன்பு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் ஹரிகுமார் ஆகியோர் முன்னிலையில் திரளான பா.ஜ.க.வினர் திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் அங்கு வந்த பா.ஜ.க.வினரிடம் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என போலீசார் கூறினர். இதனால் பா.ஜ.க.வினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 2 மணி நேர போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கட்சியினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story