நெல் அறுவடை எந்திரத்தை கூடுதல் விலைக்கு விற்றதாக பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு


நெல் அறுவடை எந்திரத்தை கூடுதல் விலைக்கு விற்றதாக பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு
x

நெல் அறுவடை எந்திரத்தை கூடுதல் விலைக்கு விற்றதாக பா.ஜ.க. ஒன்றிய செயலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36). இவர் பாரதீய ஜனதா கட்சியில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு திருச்சி மாவட்டம், கல்லக்குடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(40), தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(31) ஆகியோர் சேர்ந்து நெல் அறுவடை செய்யும் எந்திரத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். அதற்கான தொகையை பூலாம்பாடியில் உள்ள நிதி நிறுவனத்தில் கடன் பெற்று, செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர்.

பின்னர் ராமச்சந்திரனுக்கும், கார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கார்த்திகேயன் தனது பங்களிப்பு தொகையை ராமச்சந்திரனிடம் பெற்றுக்கொண்டு ஒதுங்கியதாக தெரிகிறது. இந்நிலையில் தன்னிடம் அதிக விலைக்கு நெல் அறுவடை எந்திரத்தை விற்று, செந்தில்குமார், கார்த்திகேயன், அவரது தந்தை கார்மேகம், நிதி நிறுவன மேலாளர் துரை ஆகியோர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அரும்பாவூர் போலீசில் ராமச்சந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் செந்தில்குமார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story