ஓடும் ரெயிலில் பா.ஜ.க-கம்யூனிஸ்டு நிர்வாகிகள் வாக்குவாதம்
ஓடும் ரெயிலில் பாரதீய ஜனதா கட்சியினருக்கும் கம்யூனிஸ்டுகட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஓடும் ரெயிலில் பாரதீய ஜனதா கட்சியினருக்கும் கம்யூனிஸ்டுகட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை சேர்ந்த பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று காலை சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அதே பெட்டியில் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் ஈரோடு தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதற்காக வந்தார்.
வாலாஜா அருகே ரெயில் சென்ற போது பிரதமர் மோடி குறித்து சாமுவேல்ராஜ் பேசியதாகவும், இதற்கு நாராயணன் திருப்பதி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைதொடர்ந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தவுடன், ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து சாமுவேல்ராஜ் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.