பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் நேற்று மாலை திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் டி.எஸ்.சங்கர் தலைமை தாங்கினார். பிரிவின் மாவட்ட தலைவர்கள் இ.சுரேஷ் (திருவண்ணாமலை வடக்கு), எஸ். செல்வராஜ் (வேலூர்), ரா. முருகன் (திருப்பத்தூர்), கே.முருகன் (கள்ளக்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விக்னேஷ் வரவேற்றார்.

ரூ.2 கோடியே 50 லட்சத்தில் அக்னிகுளத்தை தூர்வாரி பேரூர் ஆதீன ஆதிகுரு சிவபிரகாசரக்கு தினமும் பூஜை செய்து வந்த சிதம்பர சோனாசல சுவாமிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை கண்டித்து இதில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிதம்பர சோனாசல சுவாமிகள், மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தில்முருகன், சந்தோஷ், அனுஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை திருவண்ணாமலை தெற்கு ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் காண்டீபன் ஒருங்கிணைத்தார்.


Next Story