பா.ஜ.க. நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. நிர்வாகிகள் செயற்குழு கூட்டம்
x

பா.ஜ.க. நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் லாலாபேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சாமிதுரை தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் ராஜாளிசெல்வம், நெசவாளர் அணி மாநில செயலாளர் கைலாசம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில் லாலாபேட்டையில் அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். லாலாபேட்டை- தொட்டியத்தை இணைக்கும் வகையில் தடுப்பணை கட்ட வேண்டும். லாலாபேட்டையில் உள்ள சமத்துவ மயானத்தில் குடிநீர், மின்வசதி செய்து தர வேண்டும். சிந்தலவாடி, கள்ளப்பள்ளி ஊராட்சிகளில் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story