பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் பா.ஜ.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் பா.ஜ.க.நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில், வடக்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் பாவேந்தன், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், ''பாரதப் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், விவசாயிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை ஒருதவணைக்கு ரூ.2 ஆயிரம் வீதம் இதுவரை 11 தவணைகளாக ரூ.22 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைகளுக்கு கோதுமை, அரிசி ஆகியவை தலா 10 கிலோவீதம் வழங்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி நடத்திவரும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் தி.மு.க அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. எனவே அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை நிர்வாகிகள், தொண்டர்கள் சந்தித்து மத்திய பா.ஜ.க அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறி வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் 25 பேர் எம்.பி ஆக வருவதற்கு உங்கள் பணி இருக்க வேண்டும்'' எனக்கூறினர்.