பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
எடப்பாடி:-
பா.ஜனதா மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடப்பாடியில் நடந்தது. மாவட்ட தலைவர் சுதீர் முருகன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய அரசின் திட்டமான வேளாண் தொழில்நுட்ப அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பணியாற்றுவதற்கான வேளாண் தொழில்நுட்ப அலுவலர்கள் தேர்வில் தமிழக அரசு உரிய விதிமுறைகளை பின்பற்றாமல், பணி நியமனம் செய்ய உத்தேசித்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களும் துணை போவதாக தெரிகிறது. இதனை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி கட்சிகள், தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் களத்தை சந்திக்கும் என்றார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் கலைச்செல்வன், பாலமுருகன், சிவலிங்கம், தர்மராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.