பூலித்தேவன் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


பூலித்தேவன் சிலைக்கு பா.ஜ.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x

ெநற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர்

தென்காசி

வாசுதேவநல்லூர்:

ெநற்கட்டும்செவலில் பூலித்தேவன் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தினர்.

பிறந்த நாள்

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவனின் பிறந்த நாள் விழாவையொட்டி வாசுதேவநல்லூர் அருகே நெற்கட்டும்செவலில் உள்ள அவரது நினைவு மாளிகையில் உள்ள வெண்கல சிலைக்கு பா.ஜனதா கட்சி தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில துணைத்தலைவர், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, தென்காசி முன்னாள் மாவட்ட தலைவர் ராமராஜா, வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவர் வக்கீல் ராம்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பசும்பொன் முன்னேற்ற கழகம்

அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழக நிறுவனரும், தலைவருமான ஏ.எம்.மூர்த்தி தேவர் தலைமையில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில அமைப்பு செயலாளர் ஆர்.மாரிதேவர், மாநில இளைஞர் அணி செயலாளர் எம்.வைரதேவர், மாநில மகளிர் அணி செயலாளர் எஸ்.செல்வி, மாநில தொண்டரணி செயலாளர் கே.சாந்தி பூசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story