பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா
திருக்கோவிலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் எஸ்.டி.புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜே.வசந்தன், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.சதீஷ்குமார், எஸ்.ராமன், ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.பத்ரிநாராயணன், எஸ்.ராஜாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் தொழிலதிபர் ஆர்.கார்த்திகேயன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் ஏ.ஜி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் வீ.ஏ.டி.கலிவரதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் தில்லைக்கரசி, சண்முகவடிவேல், வாசு, சுனில், ரமேஷ், நிர்மலா, சதீஷ் பாலசுந்தர், முருகன், திருமுருகன், அறிவழகன் தங்கராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story