உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு
உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவருக்கு நினைவு பரிசாக எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அதில், ''கடந்த சட்டமன்ற தேர்தலின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செங்கலை எடுத்து வந்ததாக கூறி உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதனை நினைவுபடுத்தும் விதமாக பரிசு வழங்கியிருக்கின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து செங்கலை எடுத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story