பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை -தி.மு.க. வலியுறுத்தல்
நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்து: பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தி.மு.க. வலியுறுத்தல்.
சென்னை,
தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமை பிரிவு செயலாளர் த.மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித்தொடர்பாளர்கள் 2 பேரும் கைது செய்யப்படவேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை. அவர்கள் 2 பேர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னை காப்பாற்றிக்கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story