வாஜ்பாய் உருவப்படத்துக்கு பா.ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
மருதூரில், பிறந்த நாள் கொண்டாட்டம்: வாஜ்பாய் உருவப்படத்துக்கு பா.ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
நாகப்பட்டினம்
வாய்மேடு:
வாய்மேடு அருகே மருதூர் கடைத்தெருவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அங்கு வேதாரண்யம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் ஒன்றிய தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேந்திர குமார், ஒன்றிய பொருளாளர் சரவணன், ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணன், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் அழகு சுந்தரம், கட்சி நிர்வாகிகள் ராமாமிர்தம், அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கடினல்வயல், வண்டுவாஞ்சேரி ஊராட்சிகளில் பா.ஜனதா கட்சி கொடி ஏற்றி வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நிர்வாகிகள் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story