மாநகராட்சி வார்டுகளில் தூய்மை பணி செய்த பா.ஜ.க.வினர்


மாநகராட்சி வார்டுகளில்  தூய்மை பணி செய்த பா.ஜ.க.வினர்
x

மதுரை மாநகர் பா.ஜ.க. சார்பில் மாநகராட்சி பகுதிகளில் தினம் ஒரு வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில், துணை தலைவர்கள் ஜெயவேல், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் பாரி உள்பட 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் 15-வது வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். காலாங்கரை குடியிருப்பு பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றினர்.

மதுரை


மதுரை மாநகர் பா.ஜ.க. சார்பில் மாநகராட்சி பகுதிகளில் தினம் ஒரு வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமையில், துணை தலைவர்கள் ஜெயவேல், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் பாரி உள்பட 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் 15-வது வார்டில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். காலாங்கரை குடியிருப்பு பகுதிகளில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றினர். மேலும், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்தது.

இதுகுறித்து மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் கூறியதாவது:- மாநகராட்சியில் தூய்மை பணி முறையாக நடக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.1300 கோடி மதுரைக்கு வழங்கியது. அந்த நிதியில் பணிகள் முறையாக நடக்கவில்லை. மாநில அரசும் மதுரை மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அளித்துள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்தார். இந்த பணமும் என்ன ஆனது? என தெரியவில்லை. மாநகராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்தும், கழிவுநீர் பெருக்கெடுத்தும் ஓடுகிறது. குலமங்கலம் கால்வாயில் இருந்து வரும் 15 அடி ஆழமுள்ள காலாங்கரை கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு குப்பைகள் குவிந்து, கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி, பொதுமக்களுக்கு நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த கால்வாயில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றி தண்ணீர் செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பா.ஜ.க. சார்பில் குப்பைகளை அகற்றி மாநகராட்சி அலுவலகத்தில் கொட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் கீரை துரைக்குமார், பொருளாளர் ராஜ்குமார், இளங்கோ, மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


Next Story