பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் திருவண்ணாமலை மற்றும் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செய்தி தொடர்பாளர் வி.ஆதவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலாளர் குணசேகரன் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார்.
முன்னதாக கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சிவசங்கரன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் அருணை ஆனந்தன், ராஜ்குமார், சிவசங்கரன் உள்பட திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் தொகுதியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.