பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா
கயத்தாறு, கோவில்பட்டியில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி மந்திதோப்பு சாலையில் சர்க்கஸ் மைதானத்தில் நகர பா.ஜ.க. சார்பில் 'மோடி நம்ம ஊரு' பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி 100 பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். நகர தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச்செயலாளர் பொன். பாலகணபதி, வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்ன கேசவன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் வேல் ராஜா, கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
* கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் முன்பு கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் முருகன் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அமைப்புசாரா துணைத்தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் 100 பெண்கள் பொங்கலிட்டனர். தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ், மாநில செய்தி தொடர்பு பிரிவு செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் மாடசாமி, ஒன்றிய மகளிர் அணி தலைவி சாந்தி, துணைத்தலைவி இசக்கியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காந்தாரி அம்மன் கோவிலில் பா.ஜ.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
-----