பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா


பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா
x

வள்ளிமலையில் பா.ஜ.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பா.ஜ.க. சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக வள்ளிமலை தேரடியில் வாழைமரம், கரும்பு மற்றும் மண் பானை வைத்து பொங்கல் வைத்தனர். விவசாய அணி தலைவர் சீனிவாசலு தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர் சுமதி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினர். மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


Next Story