மேகதாதுவில் அணைகட்டுவதை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணைகட்டுவதை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து பா.ஜ.க.வினர் தஞ்சை மகர்நோன்புச்சாவடியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க.வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், அதை தடுக்க முயற்சிக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், மாவட்ட பார்வையாளர் முரளிகணேஷ், மாவட்ட பொருளாளர் விநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story