டாஸ்மாக் கடையை எதிர்த்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடையை எதிர்த்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை எதிர்த்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு சந்திப்பில் அரசு டாஸ்மாக் மதுகடை இயங்கி வருகிறது. இந்த கடையை அத்திக்குழி பகுதிக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு அத்திக்குழி, விளாத்திவிளை போன்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அத்திக்குழியில் டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து பா.ஜனதா சார்பில் காப்புக்காட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விளாத்துறை பா.ஜனதா தலைவர் மணிகண்டதாஸ் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ், கிழக்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் குமார், பொதுக்குழு உறுப்பினர் சந்திரகுமார், முன்சிறை யூனியன் தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் பிரபுசலா, விளாத்துறை ஊராட்சி தலைவர் ஓமனா, துணைத் தலைவர் சிவகுமார், புதுக்கடை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜாக்லின் ரோஸ் கலா, முன்னாள் தலைவர் மோகனகுமார், ைபங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, துணைத் தலைவர் மேரி, கல்வியாளர் பிரிவு தலைவர் ரவீந்திரன், துணைத் தலைவர் வின்சென்ட், யூனியன் கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story