கூடலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
சொத்து வரி உயர்வை கண்டித்து கூடலூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூடலூர்,
சொத்து வரி உயர்வை கண்டித்தும், கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைவுபடுத்த வேண்டும், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊதியம் செலுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய ஜனதா கட்சி சார்பில், கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் ரவி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், விவசாய அணி மாநில செயலாளருமான சவுந்தரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கூடலூரில் மீன், இறைச்சி கடைகளுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தெருவிளக்குகள் முறையாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.