பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகர பா.ஜ.க. 16-வது வார்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசு பூங்கா பகுதியில் மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நடைபெற்றது. பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் எம்.தீபா தலைமை தாங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஆறுகள் தோறும் தடுப்பணைகள் கட்டுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்த தி.மு.க. அரசு அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருக்கிறது. மேலும் நகராட்சியில் குப்பைகள் தேங்கி, கால்வாயில் துர்நாற்றம் வீசுகிறது என்று கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், பொதுச் செயலாளர் ஈஸ்வர், நகர செயலாளர் குமார், நகர துணைத் தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story