பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படாத நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க. சார்பில் திருப்பத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஹர்சவர்தன், மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருண்கிஷோர் வரவேற்றார். மாநில இளைஞரணி தலைவர் என்.ரமேஷ் சிவா ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினார். மாநில செயலாளர் கொ.வெங்கடேசன், மாவட்ட தலைவர் வாசுதேவன், துணை தலைவர் அன்பழகன், பொதுச்செயலாளர் ஈஸ்வர், நகர தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் நவீன்குமார் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் துைடப்பம், பக்கெட், குப்பை அள்ளும் பக்கெட் போன்றவத்றை வைத்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.