நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்
x

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என முபாரக் கூறினார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பல சதி திட்டம் செய்து புறவாசல் வழியாக மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அரசின் சதித்திட்டம் முறியடிக்கப்படும். மகளிர் உரிமை தொகை திட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்கிறது. இத்திட்டத்தை அனைத்து நபர்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் விரிவுப்படுத்த வேண்டும். தாணிப்பாறை மலைவாழ் மக்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் கடை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் நாடாளுமன்ற தோ்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஊழலை பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு அருகதை கிடையாது. மதவாதத்தை வீழ்த்துவதற்கான அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி இடம்பெறும். இந்தியா கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. என்.ஐ.ஏ. சிறுபான்மை மக்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. சோதனை என்ற பெயரில் தமிழகத்தில் என்.ஐ.ஏ. அச்சத்தை ஏற்படுத்துகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எஸ்.டி.பி.ஐ. கட்சி செயல்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு பேராபத்து. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story