மதுக்கடையை அகற்றக்கோரி பா.ஜனதா கையெழுத்து இயக்கம்


மதுக்கடையை அகற்றக்கோரி பா.ஜனதா கையெழுத்து இயக்கம்
x

அம்பையில் மதுக்கடையை அகற்றக்கோரி பா.ஜனதா கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் ஏற்கனவே இயங்கி வரும் மதுக்கடையை அகற்றக் கோரியும், அதே பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மதுக்கடையை நிறுத்தக்கோரியும் பா.ஜனதா சார்பில் அப்பகுதியில் கையெழுத்து இயக்கம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட துணை தலைவர் வக்கீல் ராம்ராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் மங்கள சுந்தரி, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வக்கனி, ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், நகரத் தலைவர்கள் அம்பை நடராஜன், விக்கிரமசிங்கபுரம் தங்கேஸ்வரன், கல்லிடைக்குறிச்சி ராஜேந்திர பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story