பா.ஜ.க. திடீர் சாலை மறியல்


பா.ஜ.க. திடீர் சாலை மறியல்
x

பா.ஜ.க. திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மாலை அணிவித்துவிட்டு ஊர்வலமாக சென்றனர். இந்த நிலையில் அண்ணாசிலை அருகே சென்ற போது அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தத்தை கைது செய்ததாகவும், அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். இந்த மறியல் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.


Next Story