முகத்தில் கறுப்பு துணியை கட்டி பா.ஜ.க. போராட்டம்


முகத்தில் கறுப்பு துணியை கட்டி பா.ஜ.க. போராட்டம்
x

முகத்தில் கறுப்பு துணியை கட்டி பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

முகத்தில் கறுப்பு துணியை கட்டி பா.ஜ.க. போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணமங்கலம் அருகே உள்ள அய்யம்பாளையம் இந்திரா நகர் பகுதியில் உள்ள மின் வாரிய டிரான்ஸ்பார்மர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்து விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக மும்முனை மின்சாரம் கிடைக்காததால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு நெல் பயிர்கள் உள்பட பல்வேறு பயிர்கள் வாடி வருகின்றன. இதனை சீரமைக்கக்கோரி ஒண்ணுபுரம் இளநிலை பொறியாளரிடம் பலமுறை புகார் செய்தும் சீரமைக்கவில்லை.

மேலும் டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் செலவுக்கு மின் வாரிய அதிகாரிகள் சிலர் அப்பகுதி மக்களிடம் தலா ரூ.500 தரவேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பா.ஜ.க. மாநில விவசாய அணி செயலாளர் ரேகா தலைமையில், கண்ணமங்கலம் பா.ஜ.க. பிரமுகர் முத்துவேல், உறுப்பினர்கள் ரமேஷ், மகளிரணி இந்துமதி, பாலமுருகன் ஆகியோர் ஒண்ணுபுரம் மின் வாரிய துணை மின் நிலையத்தின் முன்பு மின் வாரிய பணியாளர்களைக் கண்டித்து கண்களில் கறுப்பு துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story