தமிழகத்திற்கு காவிரி நீர் தர பா.ஜ.க. தடையாக இருக்கிறது


தமிழகத்திற்கு காவிரி நீர் தர பா.ஜ.க. தடையாக இருக்கிறது
x

தமிழகத்திற்கு தண்ணீர் தர பா.ஜ.க. தடையாக இருக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தமிழகத்திற்கு தண்ணீர் தர பா.ஜ.க. தடையாக இருக்கிறது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி

தஞ்சையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து அந்தந்த கட்சிகள் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ராகுல் காந்தியை முன்னிறுத்திதான் தேர்தலை சந்திக்கவுள்ளது. நாங்கள் ராகுல் காந்தி பிரதமரானால் இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதை முன்வைத்தே வாக்கு சேகரிக்க உள்ளோம்.

மழை, வெள்ளம், வறட்சி, விபத்து, மணிப்பூர் போன்ற மனித பேரழிவுகள் என மக்களுடைய எந்த பிரச்சினையாக இருந்தாலும், அந்த இடத்துக்கு மோடி செல்வதில்லை. மக்களுடைய பிரச்சினைகள், கஷ்டங்களில் பங்கு கொள்ளமாட்டார். ஆனால் ராகுல் காந்தி மக்களுடைய பிரச்சினைகள், கஷ்டங்கள், துன்பங்களில் உடனிருந்து சந்திக்கக்கூடிய தலைவராக உள்ளார்.

பா.ஜ.க. தடையாக இருக்கிறது

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயிற்சி போன்று நடை பயணம் மேற்கொள்கிறார். அதனால் அவரது நடை பயணம் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. பாதயாத்திரை என்ற பெயரை கேவலப்படுத்துகிற பெருமை அண்ணாமலையே சாரும்.

கர்நாடக காங்கிரஸ் அரசு எப்போதுமே தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் தடையாக இருந்ததில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறதோ, அதை கர்நாடக காங்கிரஸ் அரசு செய்கிறது. ஆனால் இதற்கு பா.ஜ.க. தடையாக இருக்கிறது. கர்நாடக பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர்தான் விவசாயிகளைப் போராட்டத்துக்கு தூண்டுகின்றனர். கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை போராட்டம் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை தடுப்பதற்காக அண்ணாமலையும், பசவராஜ் பொம்மையும் போடுகிற இரட்டை வேடத்தைத் தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story