கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.தான் வெற்றி பெறும் - மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்த முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி


கர்நாடக சட்டமன்ற தேர்தலில்  பா.ஜ.க.தான் வெற்றி பெறும் - மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்த முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி
x

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.தான் வெற்றி பெறும் என்று மீனாட்சி அம்மன் கோவில் தரிசனத்திற்கு வந்த முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஈஸ்வரப்பா பேட்டி அளித்தார்

மதுரை


உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கர்நாடக முன்னாள் துணை முதல்-அமைச்சரும், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா நேற்று காலை வந்தார். அவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் பா.ஜ.க.தான் வெற்றி பெறும். வேறு யாரும் வெற்றி பெற முடியாது. ராகுல்காந்தி பதவி நீக்கம் தாக்கத்தை ஏற்படுத்தாது. நாங்கள் கட்டாயமாக தேர்தலில் வெற்றி பெறுவோம். அரசியலமைப்பு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்று ஒன்றும் இல்லை. காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தனர். அதை நாங்கள் தற்போது நீக்கி உள்ளோம். இதனால் பாதிப்பு ஏற்படாது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது குறித்து கருத்து சொல்ல ஒன்றும் இல்லை என்றார்.


Next Story