பா.ஜ.க. மண்டல ஆய்வு கூட்டம்


பா.ஜ.க. மண்டல ஆய்வு கூட்டம்
x

முத்தையாபுரத்தில் பா.ஜ.க. மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பாக முத்தையாபுரத்தில் மண்டல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார்.

விளையாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். மண்டல துணை தலைவர்கள் ராம ஜோதி, அருண்பாபு செல்வம், பொது செயலாளர்கள் மகேஷ், பிரபு மண்டல செயலாளர்கள் பாலகுமார், மலர்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. ஆன்மிக பிரிவு வடக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் கலந்து ெகாண்டார். மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story