பா.ஜ.க.வின் 44-வது தொடக்க தின விழா கொண்டாட்டம்
பா.ஜ.க.வின் 44-வது தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது.
பெரம்பலூரில் பாரதீய ஜனதா கட்சியின் 44-வது தொடக்க தினவிழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூரில் காமராஜர் வளைவு சிக்னல் பகுதி அருகே, பாரதீய ஜனதா கட்சியின் புதிய கொடிகம்பம், பெயர்பலகை மற்றும் கொடிக்கம்பம் மேடை அமைக்கப்பட்டு, அதனை மாவட்ட தலைவர் செல்வராஜ் திறந்துவைத்தார். நகர செயலாளர் சுரேஷ் தலைமையில், கொடியேற்றிவைத்து பஸ்களில் பயணம் செய்தவர்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்களின் பயணம் செய்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சந்திரசேகர், சாமி இளங்கோவன், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயபால், மாவட்ட துணைத்தலைவர் பாலாஜிதேவேந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பா.ஜ.க. தொடக்க தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 55 இடங்களில் பாரதீய ஜனதா கட்சியின் கொடி கம்பங்களை நட்டு கொடியேற்றி வைத்து கொண்டாடப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்தார்.