பா.ஜ.க.வினர் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகம்


பா.ஜ.க.வினர் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகநேரி, முத்தையாபுரம் பகுதியில் பா.ஜ.க.வினர் வீடு வீடாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி பா.ஜ.க தெற்கு மாவட்டத் தலைவர் ஆர். சித்ராங்கதன் ஆலோசனைப்படி வீட்டு தொடர்பு பேரியக்கம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் பிரதமர் மோடி அரசின் சாதனைகளை விளக்கி ஆறுமுகநேரியில் வீடுவீடாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி மண்டல தலைவர் முருகேச பாண்டியன், துணைத்தலைவர் முருகானந்தம், செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேந்திரன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் லட்சுமி நாராயணன், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மண்டல் தலைவர் சண்முகம், விளையாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று, தூத்துக்குடி தெற்கு மண்டல பா.ஜ.க.சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரம் விநியோகம் முத்தையாபுரம் தோப்பு பஜாரில் தொடங்கப்பட்டது. அங்கிருந்து மாணிக்க விநாயகர் கோவில் தெரு, பொன்னாண்டி நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரத்தை பா.ஜ.கவினர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மண்டல தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் பொறுப்பாளர் மற்றும் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சிவராமன் உள்பட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story