தர்மபுரியில் பா.ஜ.க.வினர் கருப்பு தினமாக அனுசரிப்பு


தர்மபுரியில் பா.ஜ.க.வினர் கருப்பு தினமாக அனுசரிப்பு
x

தர்மபுரியில் பா.ஜ.க.வினர் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி

இந்திய நாட்டில் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி அப்போதைய காங்கிரஸ் அரசு எமர்ஜென்சியை கொண்டு வந்தது. இந்த நாளை பா.ஜ.க. நாடு முழுவதும் நேற்று கருப்பு தினமாக அனுசரித்தது. தர்மபுரி மாவட்ட பா.ஜ.க. சார்பில் எமர்ஜென்சி கொண்டு வந்த நாளை கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நிர்வாகிகள் எமர்ஜென்சியை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட பொது செயலாளர் வெங்கட்ராஜ், ஐஸ்வர்யம் முருகன், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் கருப்பு பட்டை அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

முன்னதாக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எமர்ஜென்சி கொண்டு வந்த காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள் பேசினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் மதியழகன், கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் சிவன், மாவட்ட செயலாளர் தெய்வமணி, நகர தலைவர் ஜிம் சக்திவேல், பிற்பட்டோர் பிரிவு தலைவர் காவேரி வர்மன், மாநில செயற்குழு உறுப்பினர் அழகு, ஒன்றிய தலைவர்கள் பச்சியப்பன், பிரபு, ராஜசேகர், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் வெற்றிவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


Next Story