படகுகளில் கருப்பு கொடிகட்டி மீனவர்கள் போராட்டம்

x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அமலிநகரில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகரில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூண்டில் வளைவு பாலம்

திருச்செந்தூர் நகராட்சியில் மீனவ கிராமமான அமலிநகர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 195 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கிராமத்தில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை தொடர்ந்து இப்பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

சட்டமன்றத்தில் அறிவிப்பு

இதையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் 2022-23-ம் ஆண்டு மீன்வளத்துறை மானிய கோரிக்கையில் திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு காலமாகியும் இதுவரை தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை.

மீனவர்கள் போராட்டம்

இதை கண்டித்தும், தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க வலியுறுத்தியும் நேற்று முதல் அமலிநகர் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் பைபர் படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story