எச்.ராஜா காரை மறித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்


எச்.ராஜா காரை மறித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்
x

திருப்பனந்தாள் அருகே எச்.ராஜா காரை மறித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

திருப்பனந்தாள்;

திருப்பனந்தாள் அருகே எச்.ராஜா காரை மறித்து கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேற்று மதியம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள பைரவேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வாகனத்தில் புறப்பட்டார்.சோழபுரம் பிரதான சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது எச்.ராஜா வருகை குறித்து தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நகர செயலாளர் கரிகாலன் தலைமையில் எச்.ராஜா காரை மறித்தனர்.பின்னர் அவர்கள், எச்.ராஜா தொடர்ந்து திருமாவளவனை அவதூறாக பேசி வருவதாக கூறி அவரை கண்டித்து கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

8 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்த சோழபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். மேலும் எச்.ராஜா வாகனத்தில் அடிப்பதற்காக வைத்திருந்த முட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேட்டி

முன்னதாக எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவதுஅறநிலையத்துறையினர் கோவில்களை முறையாக பராமரிக்க வேண்டும். மிகவும் பழமையான கோவில்களின் திருப்பணியை தமிழக அரசு தொடங்க வேண்டும். அல்லது எங்களிடம் ஒப்படைத்தால் நாங்கள் குழு அமைத்து புதுப்பித்துக் கட்டி காட்டுகிறோம்.3 கோவில்களை காணவில்லை என ஓய்வு பெற்ற போலீ்ஸ் அதிகாரி பொன்மாணிக்கவேல் கூறிய பகுதிக்கு சென்று பார்வையிட உள்ளேன். கும்பகோணம் அருகே மானம்பாடியில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட நாகநாத சுவாமி கற்கோவிலுக்கு ரூ.40 லட்சம் மத்திய அரசு கொடுத்தும், கோவில் பிரிக்கப்பட்டு இதுவரை கட்டாமல் சிலைகள் சிதறி கிடப்பது மன வேதனையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story